பழநியில் நீதிபதிகள் சுவாமி தரிசனம்,ஆய்வு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதியரசர் சுந்தரேஷ் வந்தார். ரோப் கார் மூலம் கோயில் சென்று உச்சிக்கால பூஜையில் பங்கேற்ற அவர் அதன் பின் ரோப்கார் மூலம் கிரி வீதி வந்தார்.

பேட்டரி கார் மூலம் பாத விநாயகர் கோயில் அருகே வந்து மருத மரத்தை நடவு செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார், வேல்முருகன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, மாவட்ட பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.பி., பிரதீப் உடனிருந்தனர். சன்னதி ரோடு பகுதியை நீதிபதிகள் பார்வையிட்டனர். அடிவாரம் கிரிவிதி ஆக்கிரமிப்பு குறித்த வழக்கை குழுவில் உள்ள நீதிபதிகள் விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement