சமூக விரோதிகளின் பிடியில் தொலைநோக்கி நிலையம்

கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியில் உள்ள தொலைநோக்கி நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

1977-ல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பழநி கோயில் ,அந்நகரின் அழகை தொலைநோக்கி மூலம் காணும் உயர் கோபுரம் அமைக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் அப்போதே கட்டமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இவ்விடம் கொடைக்கானல் நகராட்சி ,வில்பட்டி ஊராட்சியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளாக இவ்விடம் பராமரிப்பின்றி புதர் மண்டியும், தொலைநோக்கிகள் மாயமாகியும் காணப்படுகிறது. மேலும் இங்கு வருகை தரும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் மது பாட்டில், பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கள், இயற்கை உபாதை புரிவது என அருவருக்கத்தகையில் உள்ளது. இக்கட்டத்தை சுற்றி முகம் சுளிக்கும் வகையிலான வார்த்தை பயன்பாடு என ஒட்டுமொத்தமாக சமூக விரோதிகளின் பிடியில் உள்ளது. புதர் மண்டிய வளாகப் பகுதியில் காட்டுமாடுகள் ஓய்வெடுக்கின்றன. இப்புதர்களுக்கு மத்தியிலே இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஊடுருவிச் சென்று வில்பட்டி,பழநி நகரின் அழகை வெறுமன காணும் நிலை உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் இது போன்ற பழமை வாய்ந்த தொலைநோக்கிகள் பராமரிப்பு இன்றி, சமூக விரோதியின் பிடியில் உள்ளது பயணிகளிடையே கவலையளிக்க செய்துள்ளது.

Advertisement