மகிழ்வோடு விடைபெறுகிறேன்: தீபா கர்மாகர் நெகிழ்ச்சி!

புதுடில்லி: இந்திய ஜிம்னாஸ்டிக் விராங்கனை தீபா கர்மாகர், ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில், ஜிம்னாஸ்டிக் போட்டியில், கலந்து கொண்ட ஒரே இந்திய வீராங்கனையாக தீபா கர்மாகர் இருந்தார். பைனலுக்கு சென்ற தீபா, 4வது இடம் பிடித்து துரதிர்ஷ்டவசமாக வெண்கல பதக்கத்தை இழந்தார். அதன்பிறகு வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொண்டாலும், பெரிய வெற்றி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நான் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவு எடுப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் இதுதான் சரியான தருணம். ஜிம்னாஸ்டிக், எனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வாரு நிகழ்வும் மிகப்பெரியது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஐந்தாண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது நான் அடைந்த இலக்குகளை நினைத்து பெருமை அடைகிறேன்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடிய தருணம், என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய நினைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இவ்வாறு தீபா கர்மாகர் பதிவிட்டுள்ளார்.

Advertisement