மெகபூபாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தயார் : பரூக் அப்துல்லா புது ரூட்

4

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.,வை ஆட்சி அமைக்கவிடாமல் வெளியேற்ற மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தயார் என தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

90 இடங்களை கொண்ட இம்மாநில சட்டசபைக்கு கடந்த செப். 18, செப்.25, அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

நாளை (அக்.08) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள பரபரப்பான சூழ்நிலையில், இண்டியா கூட்டணியில் காங்.,குடன் தேர்தலை சந்தித்துள்ள தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவிடம் தொங்கு சட்டசபை அமைந்தால், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைப்பீர்களா என நிருபர்கள் கேட்டனர் அதற்கு அவர் கூறியது,

ஏன் கூடாது இம்மாநிலத்தை பொறுத்தவரை மக்களின் நலன் மேம்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே விஷயத்திற்காக உழைத்தால் தான் வெற்றி பெற முடியும். இங்கு பா.ஜ.,வை ஆட்சி அமைக்கவிடாமல் வெளியேற்ற மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணிக்கு தயார்.

இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்காது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement