செயின்ட் லுாசியா அணி சாம்பியன் * கரீபியன் பிரிமியர் லீக் தொடரில்...

கயானா: சி.பி.எல்., தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனது செயின்ட் லுாசியா கிங்ஸ் அணி.
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 'டி-20' (சி.பி.எல்.,) தொடர் 11 வது சீசன் நடந்தது. கயானாவில் நேற்று நடந்த பைனலில் செயின்ட் லுாசியா கிங்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கிங்ஸ் அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
நுார் 'ஜோர்'
கயானா அணிக்கு மோயீன் அலி (14), குர்பாஸ் (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஷாய் ஹோப் (22), ஹெட்மயர் (11), கீமோ பால் (12), கின்கிளைர் (12) என சீரான இடைவெளியில் அவுட்டாகினர். 'டெயிலெண்டர்' பிரிடோரியஸ் 12 பந்தில் 25 ரன் எடுத்து சற்று உதவினார். கயானா அணி 20 ஓவரில் 138/8 ரன் மட்டும் எடுத்தது. சுழலில் அசத்திய நுார் அகமது 3 விக்கெட் சாய்த்தார்.
ஆரோன் அபாரம்
எளிய இலக்கைத் துரத்திய கிங்ஸ் அணிக்கு கேப்டன் டுபிளசி (21), சார்லஸ் (7) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அக்கீம் (13), செய்பர்ட் (3) ஏமாற்ற, 51/3 ரன் என கிங்ஸ் அணி திணறியது. பின் இணைந்த ராஸ்டன் சேஸ், ஆரோன் ஜோன்ஸ் ஜோடி வேகமாக ரன் சேர்க்க, வெற்றி எளிதானது. கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 139/4 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்று, முதன் முறையாக கோப்பை வென்றது.

Advertisement