காங்கேயம் அருகே நுாலகத்துக்கு அடிக்கல் 20 ஆண்டு கோரிக்கைக்கு கிடைத்த தீர்வு

காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தக்காடையூர் ஊராட்சியில், அரசின் பொது நூலகத்துறை சார்பில், 50 ஆண்டுகளுக்கு மேலாக கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் உள்ள நூலகத்தில், 15 ஆயிரத்து 500 புத்த-கங்கள் உள்ளன.



போதிய இட வசதி இல்லாததால் வாசகர்கள் உட்கார கூட இட-மின்றி அவதியடைந்தனர். மூன்று சென்ட் அளவு கொண்ட நுால-கத்தை புதுப்பித்து தர, மக்கள் மற்றும் நுாலக புரவலர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நுாலகத்தை புதுப்பிக்க, 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செய-லாளர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர்கள் கருணைபிரகாஷ், சிவானந்தன், நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement