ஊராட்சியை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முற்றுகை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட கொமாராபாளையம் ஊராட்சியை, சத்தி நகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்-துள்ளது.

நகராட்சியில் ஊராட்சியை இணைத்தால் நுாறு நாள் வேலை வாய்ப்பு பறிபோகும். மத்திய அரசின் திட்டங்கள் இருக்-காது. வரி உயர்வு பல மடங்கு உயரும்... எனவே மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என்று கூறி, கடந்த, ௨ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தீர்-மானம் நிறைவேற்றினர்.இந்நிலையில் கொமாராபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்-பட்ட மக்கள், சத்தி தாலுகா அலுவலகத்த நேற்று முற்றுகை-யிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சத்தி போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, நடவ-டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தாசில்தார் சக்திவேலுவிடம் மனு அளித்து சென்றனர்.போராட்டத்தை-யொட்டி கொமாராபாளையம் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement