ஹரியானா சட்டசபை தேர்தல்: பா.ஜ., முன்னிலை; காங்கிரஸ் பின்னடைவு

5

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில், 90 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று (அக்., 08) காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. காலை 10.30 மணி நிலவரப்படி, ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், பா.ஜ., 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், முன்னிலையில் உள்ளன.

90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில், கடந்த அக்., 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 67.90 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


இதில், காங்கிரஸ், பா.ஜ., -ஐ.என்.எல்.டி., -ஜே.ஜே.பி., ஆம் ஆத்மி கட்சிகள் மோதுகின்றன. இந்த கட்சிகள் மட்டுமின்றி, பல தொகுதிகளில் செல்வாக்கு மிகுந்த தனி நபர்கள், சுயேச்சையாகவும் போட்டியிட்டனர்.

முதல்வர் நயாப் சிங் சைனி, பா.ஜ.,வின் அனில் விஜ், காங்கிரசின் வினேஷ் போகத், சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள். தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

காலை 10.30 மணி முன்னிலை நிலவரம் (மொத்தம் 90 தொகுதிகள்)

பா.ஜ., - 47

காங்கிரஸ்- 37

ஆம்ஆத்மி- 0

மற்றவை- 6



ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தல்!



கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பின்னர் ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது.

Advertisement