11, 12 வகுப்புகளில் ரோபோட்டிக்ஸ்,ஏ.ஐ., பாடம்: வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

3

புதுடில்லி; ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.



2025-26ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்(CISCE) திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020ன் படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.

அதன் முக்கிய கட்டமாக 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு படிப்புகளை கொண்டு வருகிறது. தொடக்க நிலையில் இந்த புதிய படிப்புகள் ஒருங்கிணைந்த முறையில் தான் அளிக்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் சயின்சுடன் செயற்கை நுண்ணறிவு பாடமும் சேர்க்கப்படுகிறது.

இதுதவிர முக்கிய அம்சமாக மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்று மதிப்பெண் அட்டை முறையில் கணக்கீடு செய்யப்பட திட்டமிட்டு உள்ளது. போட்டித் தேர்வுகளின் போது மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஏதுவாக, இதுபோன்ற பாடமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

தேசியக்கல்வி கொள்கையை பின்பற்றி கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள் மூலம் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

Advertisement