10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரம் வந்துருக்கு!; மகிழ்ச்சி வெள்ளத்தில் பரூக் அப்துல்லா பேட்டி

15

ஸ்ரீநகர்: '10 ஆண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.


ஜம்மு காஷ்மீரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்தது. இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி தான் முன்னிலை வகிக்கிறது. தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அதிகாரம்



இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், பரூக் அப்துல்லா கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை வெளியே கொண்டு வர முயற்சிப்போம். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.


மாநில அந்தஸ்து




ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டு வரும் முயற்சிக்கு இண்டியா கூட்டணி கை கொடுக்கும். காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்வராக தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement