இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா, கனடா விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

1

ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் ஹாப்பீல்டு மற்றும் கனடாவின் ஜெப்ரே ஹிண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரி்ன்ஸ்டன் பல்கலை விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வசிக்கும் பிரிட்டன் விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement