சொன்னது அனைத்தும் தவறு: காங்., குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

11

புதுடில்லி: ஹரியானாவில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரமற்றது எனக்கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.


ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் உடனடியாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், செய்திகளி்ல 12 சுற்றுகள் பற்றிய விவரங்கள் உள்ள போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 4 அல்லது 5 சுற்றுகளின் நிலவரங்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஏன் முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் தாமதப்படுத்துகிறீர்கள் எனக்கூறியிருந்தார்.


இதனை நிராகரித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: காங்கிரசின் குற்றச்சாட்டு தவறானது. ஆதாரமற்றது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் தோராயமாக அனைத்து தொகுதிகளிலும் 25 சுற்று முடிவுகள் பதிவேற்றப்படுகின்றன. பொறுப்பற்ற, ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத தவறான குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக நம்பகத்தன்மை வழங்குவதற்கான உங்கள் முயற்சியை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம். உங்கள் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement