காங்கிரஸில் குடுமிபிடி சண்டை: ஹூடா மீது குமாரி செல்ஜா குற்றச்சாட்டு!

3

புதுடில்லி: ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸில் தற்போது மோதல் ஏற்பட்டு உள்ளது. மாநில தலைவர் பூபிந்தர் ஹூடா மீது காங்கிரஸ் எம்.பி.,யும் முன்னாள் மத்தி அமைச்சருமான குமாரி செல்ஜா, குற்றம் சாட்டியுள்ளார்.



ஹரியானா சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகும் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து தனியாகப் போக விரும்பும் பலர் உள்ளனர். யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என என்று உறுதியாக இருக்கும்போது, என்னால் எதுவும் சொல்ல முடியாது என முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பூபிந்தர் ஹூடா கூறியிருந்தார். இதனால் காங்கிரஸின் மாநிலப் பிரிவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இவ்வாறு குற்றச்சாட்டு இருந்தபோதிலும், மாநிலத்தில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளில் ஐந்து இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 2019 இல் 28.42 ஓட்டு சதவீதத்தில் இருந்து 43.67 சதவீதமாக உயர்ந்ததால், ஹரியானாவில் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்தது


தோல்வி குறித்து குமாரி செல்ஜா கூறியதாவது: மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற தவறிவிட்டது.மாநிலத்தில் கட்சியை புத்துயிர் பெறுவதற்கும், அதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்கும் கட்சியின் தேசிய தலைமை ஒரு முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்ககள் சோர்ந்துவிட்டார்கள். நான் உறுதியாக சொல்கிறேன், கட்சி தலைமை கட்சியை வலுப்படுத்த, புதிய திட்டத்தை வகுக்க வேண்டும், சரியான நிர்வாகிகளை தேடிபிடித்து அவர்களுக்கு பொறுப்பு அளித்தால் தான் சாதகமான முடிவு கிடைக்கும்.


10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்களை, இனி காங்கிரஸ் மேலிடம் அடையாளம் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கட்சியின் தலைவர்கள், அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு குமாரி செல்ஜா கூறினார்.

Advertisement