மஹிந்திரா ஜியோ இ.வி., 765 கிலோ லேட், 160 கி.மீ., ரேஞ்ச்

'மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி' நிறுவனம், 'ஜியோ' என்ற அதன் முதல் மின்சார நான்கு சக்கர இலகு ரக வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, பிக்கப் வேன் மற்றும் டெலிவரி வாகனம் ஆகிய இரு வகையில் வந்துள்ளது.

இந்த வாகனம், மஹிந்திராவின் பிரத்யேக 300 வோல்ட் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 21.3 கி.வாட்.ஹார்., மற்றும் 18.1 கி.வாட்.ஹார்., ஆகிய இரு பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், 765 கிலோ எடை வரை ஏந்திச் செல்ல முடியும். ஒரு சார்ஜில், 160 கி.மீ., வரை பயணிக்க முடியும்.

மேலும், அடிப்படை அடாஸ் பாதுகாப்பு வசதிகள், டேஷ் கேம், டிரைவர் மானிட்டரிங் அமைப்பு, ஹில் ஹோல்டு அசிஸ்ட், 4.3 மீ டர்னிங் ரேடியஸ் ஆகிய நவீன அம்சங்கள் இதில் உள்ளன.

டீசல் வாகனத்தை ஒப்பிடுகையில், ஏழு ஆண்டுகளில் ஏழு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் கூறி உள்ளது.

விலை - ரூ. 7.52 லட்சம் முதல் ரூ. 7.99 லட்சம்




விபரக்குறிப்பு



பேட்டரி 21.3 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர் 30 கி.வாட்.,

டார்க் 114 என்.எம்.,

ரேஞ்ச் 160 கி.மீ.,

சரக்கு எடை 765 கிலோ


தார் ராக்ஸ் 4 வீல் டிரைவ் விலை அறிவிப்பு



'மஹிந்திரா' நிறுவனம், 'தார் ராக்ஸ்' ரியர் வீல் டிரைவ் காரின் விலையை மட்டும் வெளியிட்டு இருந்த நிலையில், இதன் 4 - வீல் டிரைவ் காரின் விலை 18.79 லட்சம் ரூபாய் முதல் 22.49 லட்சம் ரூபாய் வரை அறிவித்துள்ளது.

ரியர் வீல் தார் எஸ்.யூ.வி., யை ஒப்பிடுகையில், இதன் விலை 2 லட்சம் ரூபாய் அதிகமாக உள்ளது. இந்த காருக்கு, 21,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆப்ரேட்டிங் செய்வதற்காக, தார் 4 - வீல் டிரைவ் எஸ்.யூ.வி., யின் டீசல் இன்ஜின், ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதனால், 23 ஹெச்.பி., பவரும், 50 என்.எம்., டார்க்கும் அதிகரித்துள்ளன.

Advertisement