இலங்கை - ராமேஸ்வரம் 56 கி.மீ., கடலில் நீந்தும் ஆட்டிசம் சிறுவன்

ராமேஸ்வரம் : சென்னையை சேர்ந்த ஆட்டிசம் பாதித்த சிறுவனான லக்சய், இலங்கை - ராமேஸ்வரம் 56 கி.மீ., துாரத்தை நீந்தி இன்று ராமேஸ்வரம் தீர்த்த கடற்கரை வர உள்ளார்.


சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் லக்சய்; இவர், 10 வயது முதல் சென்னையில் தனியார் நீச்சல் அகடாமியில் பயிற்சி பெற்றார். இந்நிலையில், அதிக நீரோட்டம் உள்ள பாக்ஜலசந்தி கடலில், லக்சய் நீந்தி கடந்து, சாதனை படைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.


அதன்படி, நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து படகில் சிறுவன் லக்சய், பெற்றோர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரத்தை சேர்ந்த மரிய ரோஜர் ஆகியோர், வாடகை படகில் புறப்பட்டு இலங்கை தலைமன்னார் கடற்கரைக்கு சென்றனர்.

இவர்களை மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் சோதனை செய்து அனுமதித்தனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 5:00 மணிக்கு தலைமன்னார் கடற்கரையில் இருந்து லக்சய் நீந்தத் துவங்கினார். இன்று மாலை 3:00 மணிக்கு ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்தி கடற்கரைக்கு வர உள்ளதாக பயிற்சியாளர் சதீஷ் தெரிவித்தார்.

Advertisement