மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடை சரிந்து விழுந்து விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் விரிவாக்கப்பணியில் எஸ்கலெட்டர் வசதியுடன் நடை மேம்பாலம் அமைப்பதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதில் தேங்கிய தண்ணீர் அகற்றப்படாததால் பழைய ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ரயில்வே தபால் நிலையம் அருகே ஒன்றாவது நடைமேடை 100 அடி நீளம், 6 அடி அகலத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள், மின்கம்பத்துடன் சரிந்து விழுந்தது.

நள்ளிரவு பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் இல்லை. இதனால் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வரும் ஒரு சில ரயில்கள் பாதுகாப்புடன் ஒன்றாவது நடைமேடை வழியாக செல்கிறது. கூட்ஸ் உள்ளிட்ட மற்ற ரயில்கள் அருகில் உள்ள மற்ற நடை மேடைகள் வழியாக செல்கின்றன.

Advertisement