படகு தயார்; பம்புசெட்டும் தயார்: கம்பு சுற்றுகிறது சென்னை மாநகராட்சி!

30


சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சமீபத்தில், மழையின் காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.


913 மோட்டார் பம்புகள்




இந்நிலையில், இன்று(அக்.,09) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார்களை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கன மழை பொழிந்து வெள்ளம் தேங்கினாலும் உடனடியாக அகற்றுவதற்காக, மாநகராட்சி இத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement