வயநாடு இடைத்தேர்தல்: சுரேந்திரனா, ஷோபாவா?...பா.ஜ.,வில் யாருக்கு சீட்!

கொச்சி: வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில், அந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட சுரேந்தரனுக்கா, இல்லை ஆலப்புழாவில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட ஷோபாவுக்கா? யாருக்கு பா.ஜ., சீட் கொடுக்கும் என்ற கேள்வி கேரள அரசியலில் பேசுபொருளாகி வருகிறது.


வயநாடு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதியிலிலும் வெற்றி பெற்றார். அமைதி தொகுதியை வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல். இதையடுத்து வயநாடு தொகுதி காலியாக உள்ளது.


இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுவார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் பா.ஜ., சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் சுரேந்திரன்.
இந்த முறை பிரியங்கா போட்டியிடுவதால், சுரேந்திரனுக்கு பதிலாக, ஆலப்புழா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஷோபா களம் இறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் ஆலப்புழாவில் 28.3 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தவர். இருவரில் யாருக்கு சீட் கிடைக்கும் என்று பா.ஜ., தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement