சைக்கிள் வழங்கும் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமை வகித்தார். யூனியன் தலைவர் ராதிகா, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், காங்.,வட்டார தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் வழங்கினார். யூனியன் துணைத் தலைவர் சேகர், தி.மு.க.,முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, தீனதயாளன், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடாசலபதி, ஆசிரியர்கள் தங்கப்பாண்டியன், ராஜசேகர், சிலம்பரசன், மெசியானந்தி, பூர்ணிமா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement