உபகரணங்கள் வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் 58 ஊராட்சிகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு விளையாட்டு உபகரணங்களை எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை வகித்து வழங்கினார். முன்னதாக சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அப்பகுதியில் வாறுகால் அமைக்கப்படுவதையும், ஓ. கோவில்பட்டி, இனாம்ரெட்டியப்பட்டியில் சமுதாயக்கூடம் கட்டுமானம், பேவர் பிளாக் ரோடு அமைக்கப்படுவதை பார்வையிட்டார். இதில் விருதுநகர் ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement