தேசிய உர நிறுவனத்தில் 336 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!


புதுடில்லி: தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள 336 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 8.


தேசிய உர நிறுவனத்தில், பொறியியல் உதவியாளர், செவிலியர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஜூனியர் பொறியியல் உதவியாளர்- 108.


மெக்கானிக்கல் ஜூனியர் பொறியியல் உதவியாளர்- 6.


இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஜூனியர் பொறியியல் உதவியாளர்- 33.


எலக்ட்ரிக்கல் ஜூனியர் பொறியியல் உதவியாளர்- 14,


கெமிக்கல் லேப் ஜூனியர் பொறியியல் உதவியாளர்- 10.


ஸ்டோர் அசிஸ்டன்ட்- 19,


லோகோ அட்டென்ட் - 8,


செவிலியர்- 10.


Pharmacist- 10,


லேப் டெக்னீசியன்- 4.


எக்ஸ்ரே டெக்னீசியன்- 2,


அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட் -10,


பிட்டர்- 40.


வெல்டர்- 3,


ஆட்டோ எலக்ட்ரீசியன் - 2.


மெக்கானிக்கல் அசிஸ்டன்ட் -2,


எலக்ட்ரிக்கல் அட்டன்ட் - 33,


ஓ.டி., டெக்னீசியன்- 3



கல்வி தகுதி என்ன?




பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


கெமிக்கல் லேப் பணியிடங்களுக்கு, வேதியியல் பாடப் பிரிவில் பி.எஸ்.சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஸ்டோர் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு Commerce பாடப்பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு




விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்வது எப்படி?




எழுத்து தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்ப கட்டணம்




விண்ணப்ப கட்டணம் ரூ. 200. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PwBD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




விண்ணப்பிப்பது எப்படி?




http://nationalfertilizers.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement