கவுசிகா நதியில் நீர்வழி தடம் துார்வாரும் பணி

விருதுநகர், விருதுநகர் கவுசிகா நதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நீர் வழித்தடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

விருதுநகர் கவுசிகா நதியின் கரைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக், குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கரைப்பகுதிகளில் அதிக அளவிலான பகுதிகள் மாசடைந்து மண்வளம் பாதித்தது. நதியில் செல்லும் நீர் மாசடைந்து விட்டது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் நதியின் நீர் வழித்தடங்களில் வளர்ந்து அடர்ந்துள்ள முட்புதர்கள், குப்பையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை மூலம் மதுரை - கன்னியாகுமரி ரோட்டில் உள்ள கவுசிகா நதி குறுக்கே செல்லும் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் நீர் வழித்தடத்தில் குவிந்துள்ள குப்பை, கழிவு நீர், முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

Advertisement