கூட்ட நெரிசலை தவிர்க்க ஆயுத பூஜை சிறப்பு ரயில்

மதுரை : ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு 3 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - கன்னியாகுமரி



சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06193) அக்.,10, 12ல் எழும்பூரில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:20 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06194) அக்.,11, 13ல் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு எழும்பூர் செல்லும்.

இவ்விரு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவிலில் நின்று செல்லும்.

10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும்.

சென்னை - கோட்டயம்



சென்னை சென்ட்ரல் - கோட்டயம் சிறப்பு ரயில் (06195) அக்.,10, 12ல் சென்ட்ரலில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1:45 மணிக்கு கோட்டயம் செல்லும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06196) அக்.,11, 13ல் கோட்டயத்தில் இருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும்.

இவ்விரு ரயில்களும் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுனில் நின்று செல்லும். சிறப்பு ரயில் (06196) மட்டும் பெரம்பூரில் நின்று செல்லும்.

8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும்.

எர்ணாகுளம் - மங்களூரு



எர்ணாகுளம் சந்திப்பு - மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (06155) அக்., 10ல் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு இரவு 9:00 மணிக்கு மங்களூரு செல்லும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06156) அக்.,11ல் மங்களூரு சந்திப்பில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

இவ்விரு ரயில்களும் ஆலுவா, திருச்சூர், ஷோரனுார், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணுார், காசர்கோட்டில் நின்று செல்லும்.

2 இரண்டடுக்கு ஏ.சி., படுக்கை வசதி பெட்டிகள், 5 மூன்றடுக்கு ஏ.சி., படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டியுடன் இயக்கப்படும்.

இம்மூன்று ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது.

Advertisement