ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை: மஹா.,வில் இன்று அரசு முறை துக்கம்!

1


மும்பை: தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மஹா., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அவரது உடல் இன்று(அக்.,10) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.


உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று(அக்.,9) இரவு 11.30 மணிக்கு காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று(அக்.,10) துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.


இது குறித்து, மஹா., முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரத்தன் டாடாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக, இன்று(அக்.,10) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.



நிகழ்ச்சிகள் ரத்து




பிற்பகல் 3.30 மணியளவில், அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக வொர்லி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். துக்கத்தின் அடையாளமாக மஹாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய மூவர்ணக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மஹா.,வில் இன்று மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement