மாநிலங்களுக்கு ரூ.1.78 லட்சம் கோடி; தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி; நிதி விடுவித்தது மத்திய அரசு!

11


புதுடில்லி: வரி வருவாயில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில வாரியாக நிதி விடுவிக்கப்பட்ட விபரம் பின்வருமாறு:



* ஆந்திராவுக்கு ரூ.7,211 கோடியும், அருணாச்சல பிரதேசதிற்கு ரூ.3,131 கோடியும், அசாமிற்கு ரூ.5,573 கோடியும், பீஹாருக்கு ரூ.17,921 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.6,070 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.



* கோவாவிற்கு ரூ.688 கோடியும், குஜராத்திற்கு ரூ.6,197 கோடியும், ஹரியானாவிற்கு ரூ.1,947 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,479 கோடியும், ஜார்க்கண்ட்டிற்கு ரூ.5,892 கோடியும், விடுவிக்கப்பட்டுள்ளன.



* கேரளாவிற்கு ரூ.3,430 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.6,498 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.13,987 கோடியும், மஹாராஷ்டிராவிற்கு ரூ.11,255 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1,276 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.



* மேகாலயாவிற்கு ரூ.1,367 கோடியும், மிசோரத்திற்கு ரூ.891 கோடியும், நாகலாந்திற்கு ரூ.1,014 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.8,068 கோடியும், பஞ்சாபிற்கு ரூ.3,220 கோடியும், ராஜஸ்தானிற்கு ரூ.10,737 கோடியும், சிக்கிமிற்கு ரூ.691 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.


* தமிழகத்திற்கு ரூ.7,268 கோடியும், தெலுங்கானாவிற்கு ரூ.3,745 கோடியும், திரிபுராவிற்கு ரூ.1,261 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.31,962 கோடியும், உத்தரகாண்டிற்கு ரூ.1,992 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.13,404 கோடியும் விடுக்கப்பட்டுள்ளன.

Advertisement