போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 'டாப் 100' பணக்காரர்கள் பட்டியல்; முதல் இடத்தில் தொடர்கிறார் முகேஷ் அம்பானி!

3

புதுடில்லி: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். அவரது சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: தொழில் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். அவரது சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது. கடந்து ஆண்டில் மட்டும் 27.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.



* அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 116 பில்லியன் டாலர் குடும்பச் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


* ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் முதல் முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 43.7 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.



* இந்தியாவின் பணக்கார பெண்மணி என்ற இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.


* ஷிவ் நாடார் 40.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:





* முதல் இடம்; முகேஷ் அம்பானி- 119.5 பில்லியன் டாலர்,

* இரண்டாம் இடம்: கவுதம் அதானி - 116 பில்லியன் டாலர்,

* மூன்றாம் இடம்: சாவித்ரி ஜிண்டால் - 43.7 பில்லியன் டாலர்,

* நான்காம் இடம்: ஷிவ் நாடார்- 40.2 பில்லியன் டாலர்,

* 5ம் இடம்: திலீப் ஷங்வி: 32.4 பில்லியன் டாலர்,

* 6ம் இடம்: ராதாகிஷன் தமானி- 31.5 பில்லியன் டாலர்,

* 7ம் இடம்: சுனில் மிட்டல்- 30.7 பில்லியன் டாலர்,

* 8ம் இடம்: குமார் பிர்லா - 24.8 பில்லியன் டாலர்,

* 9ம் இடம்: சைரஸ் பூனவல்லா- 24.5 பில்லியன் டாலர்,

* 10ம் இடம்: பஜாஜ் குடும்பம்- 23.4 பில்லியன் டாலர்.
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் சொத்து மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement