நடிகை சமந்தா, நாக சைதன்யா விவகாரம்: தெலுங்கானா அமைச்சருக்கு கோர்ட் சம்மன்

ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்து தொடர்பாக சர்ச்சை கருத்து வெளியிட்ட தெலுங்கானா அமைச்சருக்கு கீழ் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

தெலுங்கானா மாநில காங்., அமைச்சர் கொன்ட சுரேகா சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்துக்குக் காரணம் தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் கேடிஆர் (முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகன்) எனவும் பல நடிகைகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியதற்கு கேடிஆர் தான் காரணம் என்றும் மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண் அமைச்சர் சுரேகா சர்ச்சை பேச்சுக்கு நடிகர் நாகார்ஜூனா குடும்பத்தினர், நடிகை சமந்தா, நாகசைதன்யா ஆகியோர் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் கொன்ட சுரேகா மீது ஹதராபாத்திலுள்ள நம்பள்ளி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 23-ம் தேதி அமைச்சர் கொன்ட சுரேகா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

***************

Advertisement