வேதாந்தா அகாடமி பள்ளி ஆண்டு விளையாட்டு விழா

கோவை: கோவை சீரப்பாளையத்திலுள்ள, வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 13வது பள்ளி விளையாட்டு ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் நடந்தது.கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் தலைமைவகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.

விளையாட்டு விழாவில், 50 மீ. 75 மீ 100 மீ 200 மீ 400 மீ, ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம். சதுரங்கபோட்டி, கேரம், எறிபந்து, நீச்சல் போட்டி, ஷாட் புட், பூப்பந்து, கால்பந்து, கராத்தே, யோகா, சிலம்பம், போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், பள்ளியின் தாளாளர் சரவணன், இயக்குனர் சுதர்சன் ராவ், பள்ளி செயலாளர் நடராஜன், முதல்வர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement