வளர்ச்சி பணிகளுக்கு தீர்மானமே அச்சாரம்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சிகள், ஊரக உள்ளாட்சிகள் என்ற தலைப்பில் பிரிக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்குகின்றன. ஊரக உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் அமைந்திருக்கிறது.

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 37 பேரூராட்சிகள், 12 ஒன்றியங்கள், 227 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவ., 1ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் மன்ற கூட்டம் நடத்தப்பட்டு, அவற்றில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அதிகாரமுள்ள, தன்னாட்சி அமைப்பான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையரின் தலைமையின் கீழ் இயங்குகிறது.

Advertisement