மாசில்லா ஆயுத பூஜை மாநகராட்சியில் துவக்கம்

கோவை : கோவை மாநகராட்சி, இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு மற்றும் சாந்தம்மாள் சுந்தரம் அறக்கட்டளை சார்பில், ஆயுத பூஜைக்கு சுத்தம் செய்யும்போது, கழிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், மின்னணு கழிவுகள் மற்றும் தெர்மோக்கோல் ஆகிய பொருட்களை, 81வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாங்கும் வகையில், 'மாசில்லா ஆயுத பூஜை' பணி நேற்று துவக்கப்பட்டது.

இப்பணியை, பாரதி பார்க் வளாகத்தில் மேயர் ரங்கநாயகி, எம்.பி., ராஜ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சள் பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சிவக்குமார், சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன், நகர் நல அலுவலர் பூபதி, மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement