சிறப்பு மிக்க 'ஸ்மார்ட் மாடர்ன்' சி.பி.எஸ்.இ., பள்ளி

திருப்பூர் : திருப்பூரில் இருந்து அம்மாபாளையம் செல்லும் சாலையில் நவீன வசதி, விசாலமான கட்டட வசதியுடன், இயற்கையான சூழலில் அமைந்துள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) சிறப்புகள் குறித்து நிர்வாகத்தினர் கூறியதாவது:

நல்ல தரமான கல்வி, உயர் தொழில் நுட்பத்தில் நவீன வசதிகளுடன் கல்வி பயிற்றுவித்து, நல்ல பண்புள்ள மாணவர்களை இந்த சமுதாயத்தில் மலர செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான், 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி உருவாக்கப்பட்டது.இன்றைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் வகுத்து, செயல்படுத்தி, மாணவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக, வாழ்வின் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன்படைத்தவர்களாக உருவாக்கி வருகிறது.

மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துதல், மனிதநேயம், பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுதல், சமூக அக்கறையுடன் கூடிய பொறுப்புணர்வு, பணிவுடன் கூடிய கடமையுணர்வு ஆகியவற்றை எம் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கல்வியுடன் விளையாட்டு, இசை, ஓவியம், யோகா, நடனம், கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கப்படுகிறது. வி.வி.எம்., பிசிபிஓ., கேம்ப், ஒலிம்பியாட், கேம்பிரிட்ஜ், பி.எஸ்.ஜி., டெக் போன்ற மாணவர்களின் திறமையை வளர்க்கும் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

கடந்த, 11 ஆண்டுகளாக 10, பிளஸ் 2 பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளோம். மாணவர்களுக்கு தனித்தனி லாக்கர் வசதி, ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நவீன வகுப்பறை, பாதுகாப்பான பஸ் வசதி, திறமையான ஆசிரியர்கள், நவீன நுாலகம், புதுமையான அறிவியல் ஆய்வகம், ஹிந்தி, பிரெஞ்சு மொழி பயிற்சி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பள்ளி செயல்படுகிறது.

Advertisement