பெண் பத்திரிக்கையாளர் லிப்ஸ்டிக் சர்ச்சை; மார்க்சிஸ்ட் தலைவருக்கு எதிர்ப்பு

திருச்சூர்: பெண் பத்திரிக்கையாளரின் லிப்ஸ்டிக் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் விஜயராகவன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நீலம்பூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் விஜயராகவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நல்ல உடையை அணிந்து பத்திரிக்கையாளர்கள் ரொம்பவும் பொய் பேசுவதாகவும், நல்ல சட்டை, பேண்ட் மற்றும் லிப்ஸ்டிக் போட்டு இருப்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.


அவரது இந்தப் பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திருச்சூரில் செய்தியாளர்களை சந்தித்த விஜயராகவனிடம், பெண் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த அவர், "உங்கள் மீது இருக்கும் அன்பின் காரணமாகத் தான் அப்படி சொன்னேன். ஏன், லிப்ஸ்டிக் என்றால் இவ்வளவு பயப்படுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. லிப்ஸ்டிக் என்ற வார்த்தை தவறானதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisement