ஜப்பான் அமைப்புக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு!

1


ஸ்டாக்ஹோம்: ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கான அறிவிப்பும், கடந்த 7ம் தேதி துவங்கியது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்காக முயற்சி செய்ததற்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு கூறியுள்ளது.

Advertisement