திண்டுக்கல் கொட்டப்பட்டியில் புது பஸ்ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் கொட்டப்பட்டி பகுதியில் ரூ.47.18 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் அக்.14ல் நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் குறித்து பொது மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து, அதனை ஆய்வு செய்த அதிகாரிகள், ஆய்வு செய்தனர். பிறகு புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று, திண்டுக்கல்லில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூ.47.18 கோடி ஒதக்கப்பட்டது. இதனையடுத்து இடம் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் - வத்தலக்குண்டு பைபாஸ் சர்வீஸ் ரோடு பள்ளப்பட்டி கிராமம் கொட்டப்பட்டி அருகே
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு குடிநீர்,கழிப்பறை,கடைகள்,பஸ் நிறுத்துவதற்காக 60 ரேக்குகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதை இங்கு அமைப்பதற்காக பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளிகள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்பதற்காக அக்.14 மாலை 4:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement