காங்கேயம் பகுதியில் 13 இடங்களில் மின் திருட்டு: ரூ.24.85 லட்சம் அபராத வசூல்

காங்கேயம் : காங்கேயம் தாலூகாவில் மின் திருட்டு நடந்ததை மின்சார வாரியம் அதிரடியாக கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து ரூ.24.85 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.


சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு பிரிவுகளில் செயல் பொறியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் தலா ஒரு உதவி செயற்பொறியாளர், எலக்ட்ரிக்கல் தலைமையில் 21 அமலாக்கப் படைகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை அமலாக்க கோட்டத்தின் நுண்ணறிவு பிரிவு, பறக்கும் படை, கோவை அமலாக்க அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் பல்லடம் மின் பகிர்மான வட்டம், காங்கேயம் கோட்டத்திற்குட்பட்ட, காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், பழையகோட்டை, சிவன்மலை ஆகிய பகுதியில் தீடீரொன ஆய்வு மேற்கொண்டனர். மின்வாரியத்தில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தை தவறாகவும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தி மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் காடையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, காங்கயத்தில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 13 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ. 24 லட்சத்து 85 ஆயிரத்து 423 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோர்களுக்கு விதிக்கபட்டது. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர் (அமலாக்கம் - கோவை ) கைபேசி -94430 49456 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Advertisement