இஸ்ரேலுடனான உறவை முறித்த நிகரகுவா

1

ஜெருசலேம்: இஸ்ரேலுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக மத்திய அமெரிக்கா நாடான நிகரகுவா அறிவித்துள்ளது.


காஸா மீது ஓராண்டாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


போரை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேலுக்கு மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா கண்டனம் தெரிவித்து, துாதரக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
நிகரகுவாவின் துணை அதிபர் ரொசாரியோ முரிலோ, பாசிச கொள்கையுடன் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க அதிபர் டேனியல் ஓர்டீகா முடிவு செய்து விட்டதாக கூறினார்.


இதன்மூலம், இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொண்ட மத்திய அமெரிக்க நாடுகளான, கொலம்பியா, சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளுடன் நிகரகுவாவும் இணைந்துள்ளது. இடதுசாரி கொள்கை கொண்ட இந்த நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவையாகும்.

Advertisement