அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் மனித முகம்

அறிவியல் ஆயிரம்


செவ்வாயில் மனித முகம்

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து உள்ள செவ்வாய் கோளின் தரைப்பகுதியில் 2021 பிப். 18ல் இருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி மையம் நாசாவின் 'பெர்சிவிரன்ஸ் ரோவர்', பாறை கற்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதில் ஒன்று, செங்குத்தாக பார்ப்பதற்கு மனித முகத்தின் வடிவம் போல உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது செவ்வாயின் ஜெசிரோ கிரேட்டர் பகுதியில் 2024 செப். 27ல் படம் பிடிக்கப்பட்டது. 45 கி.மீ., அகலமுள்ள இப்பகுதி 370 கோடி ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் வெள்ளம் சூழ்ந்ததாக இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement