சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 7 பேர் பலி

மேஹ்சானா: குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், அடியில் சிக்கிய தொழிலாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


மேஹ்சானாவில் இருந்து 37 கி.மீ., தொலைவில் உள்ள காடி நகரில் தனியார் தொழிற்சாலை ஒன்றிற்கு, நிலத்திற்கு அடியில் டேங்க் கட்டுவதற்காக, குழி தோண்டும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, திடீரென சுவர் இடிந்து விழுந்ததில், குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்படியே மூடியது. இதில், 10 பேர் சிக்கிக் கொண்டனர். இதனால், பதறிப்போன சக தொழிலாளர்கள், மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில், மாவட்ட வளர்ச்சி அதிகாரி ஹஸ்ரத் ஜாஸ்மின் தலைமையில் மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. அதில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 19 வயது இளைஞர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


இந்த சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இது மிகவும் சோகமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement