சூப்பர் ஸ்டாருக்கு வேலை இருக்கு; சொல்லி விட்டார் சுந்தர் பிச்சை!

6

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தில் சேர விரும்புபவர்களிடம், தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை விளக்கமளித்து உள்ளார்.


'ஆல்பபெட்' நிறுவனத்தைச் சேர்ந்த கூகுள், உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்பது பலரின் லட்சியமாகவும், நோக்கமாகவும், கனவாகவும் இருக்கிறது.


இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கான தகுதி குறித்து அந்த சி.இ.ஓ., சுந்தர் பிச்சை பேட்டி அளித்துள்ளார்.


அப்போது அவர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சூப்பர் ஸ்டார் மென்பொறியாளர்களை எதிர்பார்க்கிறது. கூகுளின் பொறியாளர் குழுவில் சேர விருப்பம் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவும், புதிய சவால்களை ஏற்றுக் கொண்டு அதில் பாடம் படித்து முன்னேறுபவர்களாக இருக்க வேண்டும்.


ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இது, அவர்களிடம் சமூக உணர்வை உருவாக்கவும், புதிய சிந்தனைத்திறனை தூண்டவும் உதவும். கூகுள் வழங்கும் பணியாணைகளை 90 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கின்றனர். இது கடுமையான வேலைச்சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கு இருக்கும் வலிமையை காட்டுகிறது. தொழில்நுட்ப துறையில் ஆட்கள் தேர்வு குறைந்துவிட்ட நிலையில், கூகுளில் பணிபெறுவது என்பது மதிப்புமிக்க சாதனை.


ஆரம்ப கட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டி கடுமையாக உள்ளதால், அந்தப்பணிகளில் சேர விரும்புபவர்கள், தங்களை வேறுபடுத்தி காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார்.

Advertisement