அதிகம் சொத்து சேர்த்த இந்திய பணக்காரர்; அம்பானியை முந்திய அதானி

10

புதுடில்லி: அதிகம் சொத்து சேர்த்தவர்கள் குறித்து 'போர்ப்ஸ்' இந்தியா வெளியிட்ட பட்டியலில் அதானி முதலிடத்தை பிடித்துள்ளார்.


இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 119.5 பில்லியன் டாலர்களுடன் முதல் இடத்தை பிடித்தார். அதானி குழும தலைவர் அதானி 116 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


இந்நிலையில், போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2024ம் ஆண்டில் அதிகம் சொத்து சேர்த்தவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

அதில், அதானி முதலிடத்தில் உள்ளார். அவர் முந்தைய ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 48 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உள்ளார்.

இரண்டாவது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி கடந்த ஆண்டை காட்டிலும் இந்தமுறை 27.5 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உள்ளார்.


மூன்றாவது இடத்தில்
சாவித்ரி ஜிண்டால் 16.7 பில்லியன் டாலரும்

நான்காவது இடத்தில் உள்ள சுனில் மிட்டல் 13.9 பில்லியன் டாலரும்

5வது இடத்தில் உள்ள திலீப் சங்கவி 13.4 பில்லியன் டாலர் சொத்துகளும் இந்தாண்டு சேர்த்துள்ளனர்.இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement