விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி பயன்படுத்த ஈரான் தடை!

19

டெஹ்ரான்: இஸ்ரேல் உளவுப் படை மீதான அச்சம் காரணமாக ஈரான் விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், ஒரு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் வசிக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.


சமீபத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் மர்மமான முறையில் வெடித்துச் சிதறின. இதற்கு, அவற்றில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தான் காரணம்.


இஸ்ரேல் உளவுப்படை 5 மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டுகளை அவற்றில் வைத்தது விசாரணை தெரியவந்தது. இந்த தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பேஜர், வாக்கி டாக்கி மூலம் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.


இந்நிலையில், ஈரானில் விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தாக்குதல் நடத்தியது போல் தங்கள் நாட்டிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த தடையை ஈரான் விதித்துள்ளது.

Advertisement