'நீ தங்கம் வென்றால் நானும் வெல்வேன்' கராத்தேயில் அசத்தும் இரு இரட்டையர்கள்

எங்கு சென்றாலும் பரிசு மழையில் நனைந்து, கராத்தே கலையில் கலக்கி வருகின்றனர் ராமநாதபுரத்தை சேர்ந்த இரு இரட்டையர்கள். ஆறாம் வகுப்பு மாணவிகள் ஏ.யாழினி, ஏ. தமிழினி- இவர்கள் இரட்டையர்கள். நான்காம் வகுப்பு மாணவன் எஸ். ஷாஹித், மாணவி எஸ்.ஷமீரா- இவர்கள் இன்னொரு ஜோடி இரட்டையர்கள்.

திருவனந்தபுரம், சென்னை, பெரம்பலுார், மதுரை, துாத்துக்குடி, சிவகங்கையில் நடந்த தேசிய, மாநில அளிவிலான கராத்தே போட்டிகளில் பரிசுகள் பெற்று இவர்கள் சாதித்துள்ளனர். இரட்டையர் போட்டிகளில் 'நீ ஒரு தங்கம் வென்றால் நானும் ஒரு தங்கம் வெல்வேன்,' என்று தொடர்ந்து சாதனை செய்கின்றனர்.

இரு இரட்டையர்களையும் பார்த்து பல மாணவர்கள் தாங்களும் இதுபோல் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இனி.. இரு இரட்டையர்கள் கூறுவதை படிப்போம்...

எஸ்.ஷமீரா, ஷாஹித்



நாங்கள் ஐந்து வயது முதல் கராத்தே பயிற்சியில் ஈடுபடுகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுத்தாலும் கராத்தே பயிற்சிக்கு விடுப்பு எடுப்பதில்லை. மாஸ்டர் கண்ணன், ஆசிரியர்கள், பெற்றோர் எங்களை ஊக்கப்படுத்துகின்றனர். கராத்தேயில் உலக சாம்பியன் ஆவதே எங்கள் ஆசை.

ஏ. தமிழினி, யாழினி



கராத்தே பயிற்சியால் எங்கள் உடலும், மனதும் வலிமை அடைகிறது. நாங்கள் பலசாலிகளாக உணர்கின்றோம். எங்களின் உடல் ஆற்றலை முடிந்த வரை அதிகபட்சமாக பயன்படுத்தி விரைவாக பதிலடி கொடுக்க முடிகிறது. நாங்கள் சுறுசுறுப்பாக இருக்க கராத்தே உதவுகிறது.

எந்த சூழ்நிலையிலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. படிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தி கல்வியிலும் சாதனை செய்ய முடிகிறது. கராத்தே, படிப்பு -இரண்டிலும் நாங்கள் முதலாவதாக இருக்க விரும்புகின்றோம்.

ராமநாதபுரம் ரயான் ஷிட்டோ-ரியோகராத்தே பள்ளிதலைமை பயிற்சியாளர் கண்ணன் கூறியதாவது: ராமநாதபுரம் பட்டாலின் எஸ்.பி., அருண்மகள்கள் தமிழினி, யாழினியும். ராமநாதபுரத்தில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ள ஷாஜஹான் மகன் எஸ். ஷாஹித், மகள் எஸ்.ஷமீரா.

இந்த இரு இரட்டையர்களும் கராத்தேயில் 'புலிகளாய்' உள்ளனர். இப்போது பிரவுன் பெல்ட் பெற்றுள்ளனர். 2025ல் பிளாக் பெல்ட் பெற உள்ளனர். எனது கராத்தே மாணவர்கள் மருத்துவம், ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளனர் என்றார்.

மேலும் அறிய 99447 31069ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement