படகு, பம்புசெட், டிராக்டர் எல்லாமே ரெடி; மழை வருவது மட்டும் தான் பாக்கி!

14


சென்னை: வடகிழக்கு மழையை சமாளிக்க டிராக்டர்கள், பம்புகள் தயாராக உள்ளது என புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சென்னை மாநகராட்சி பகிர்ந்துள்ளது.



தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பருவமழைக்கு முன்னதாகவே, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நாளை கனமழைக்கான ஆரஞ்ச் ஆலர்ட் சென்னைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (அக்.,13) வடகிழக்கு மழையை சமாளிக்க டிராக்டர்கள், பம்புகள் தயாராக உள்ளது என்றும், நிவாரண முகாம்களில் ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருப்பதாகவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


133 பம்புகள் தயார்



'கனமழைக்கான 6வது மண்டலத்தில் மட்டும், தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்கள் கொண்ட 10 டிராக்டர்கள், 100 குதிரைத்திறன் கொண்ட 133 பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 400 டிராக்டர்கள் சென்னைக்கு வருகின்றன' என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மழையை சமாளிக்க, 36 படகுகள், 913 மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement