மழையை எதிர்கொள்ள தயார்; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

சென்னை: ' மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம்' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.


சென்னை, ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு உதயநிதி அளித்த பேட்டி:


சென்னையில் மழைநீர் பாதிக்கப்படும் பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம்.

TN-Alert செயலி




சென்னையில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் 4 ஷிப்டுகளில், 150 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவர். மாநகராட்சியின் சமூக வலைதளங்கள், TN-Alert செயலி மூலம் மழை தொடர்பாக அறிவிப்புகளை அறியலாம். மூடாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றித் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கலாம்;


உதவிக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம். பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு உதயநிதி கூறினார்.

Advertisement