வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கேரளா தீர்மானம்

8

திருவனந்தபுரம்; வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், புதிய மசோதாவை ஆக.08-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதையடுத்து மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்றது. மாநில அமைச்சர் அப்துரஹமான் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது அவர் பேசியது, வக்பு வாரிய திருத்த மசோதா மாநில உரிமைகளை மீறுவதாகும், வக்பு சொத்துக்களை மேற்பார்வையிடும் வக்பு வாரியங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது என்றார். இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

Advertisement