முதல்வர் கோப்பை விளையாட்டு பதக்கங்களை குவிக்கும் சென்னை

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்து வருகின்றன.

பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, ஐந்து பிரிவுகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் தடகளப் போட்டியில், பள்ளி பிரிவில் 800 மீ., ஓட்டத்தில், சென்னை வீரர் தனுஷ் தங்கமும், கன்னியாகுமாரி வீரர் சத்தியபிரியன் வெள்ளி; நெல்லை சிவா குணாநிதி வெண்கலம் பதக்கமும் வென்றனர்.

கல்லுாரி பிரிவில் 800 மீ.,ஓட்டத்தில், சென்னை வாசன், கோவை சுதின்குமார், செங்கை பிரேம்நாத் ஆகியோர். முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அதேபிரிவில், மாணவியரில் சென்னை லாவண்யா, மதுரை சவுந்தர்யா, கோவை ஹேமதி ஆகியோர், முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

பள்ளி மாணவர் பிரிவில், 200 மீ., ஓட்டத்தில் சென்னை கவுசிக், சிவகங்கை சுபாஷ், கன்னியாகுமாரி ஜோஷன் ஆண்டோ ஆகியோர் வென்றனர்.

அதேபிரிவில் கல்லுாரி மாணவரில், சென்னை விஷால், செங்கை கோகுல் பாண்டியன் மற்றும் வேலுார் சந்தோஷ் ஆகியோர் முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.

நேற்று மதியம் வரை நடந்த போட்டிகள் முடிவில், ஒட்டு மொத்தமாக சென்னை மாவட்டம், 53 தங்கம், 36 வெள்ளி, 37 வெண்கம் என, மொத்தம் 126 பதக்கங்களை வென்று, முன்னிலையில் உள்ளது.

மாவட்டம் பதக்கம் புள்ளியில்

சென்னை 126 முதலிடம்சேலம் 30 இரண்டாமிடம்ஈரோடு 23 மூன்றாம் இடம்

Advertisement