வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முறையீடு



ஈரோடு, அக். 15-
ஈரோடு பெரிய சேம்பர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு, கல்லாங்காடு, ஸ்ரீராம் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். அப்பகுதியில் இருந்து எல்லப்பாளையம், பெரியசேமூர் பகுதிக்கு செல்ல, 2, 3 கி.மீ., துாரம் சுற்றி செல்வதாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள ஒரு வண்டிப்பாதை, 200 மீட்டர் எல்லப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. அச்சாலையை சில குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி, வருவாய் துறையினர் ஆய்வு செய்து, எங்களுக்கான பாதையாக அமைத்து தர வேண்டும். கடந்த மாதம் ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கினோம். இதன்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் தடுத்து, பணி செய்யவிடவில்லை. இதனால் பாதையை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement