போதை மாத்திரை விற்ற சினிமா உதவி இயக்குனர் கைது

கே.கே.நகர், சென்னை அசோக் நகர், 92வது தெருவிலுள்ள ஒரு வீட்டில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, 30 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் அடங்கிய 29 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின.

அவற்றை பதுக்கி வைத்திருந்த சினிமா உதவி இயக்குனர் தர்ஷன், 21, என்பவரை, கே.கே.நகர் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கஞ்சா விற்பனை செய்ததாக தர்ஷன் மற்றும் வடபழனியைச் சேர்ந்த சிதம்பரம், 29, ஆகிய இருவரை, இரண்டு மாதங்களுக்கு முன் கே.கே.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன் வெளியே வந்த தர்ஷன், மீண்டும் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தர்ஷனை கைது செய்தனர்.

Advertisement