பட்டாசு கடைக்கு 236 விண்ணப்பம்

ஈரோடு, அக். 15-
மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம், 236 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், 93 விண்ணப்பங்களை தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பியுள்ளனர். மீதி விண்ணப்பங்கள் ஓரிரு நாட்களுக்குள் ஆய்வு செய்து அனுப்பி வைக்கப்படும்.
தற்காலிக பட்டாசு கடைகள் ஒன்பது சதுர மீட்டருக்கு குறையாமலும், 25 சதுர மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடைகளில் இரு தீயணைப்பான்கள், போதிய அளவு தண்ணீர், இரு தண்ணீர் டிரம், மணல் நிரப்பப்பட்ட இரண்டு பக்கெட் கட்டாயம் இருக்க வேண்டும். விற்பனையாகாத பட்டாசுகளை அப்புறப்படுத்துவதும் குறித்தும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
மேலும், பட்டாசு கடைகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே பணி செய்யவும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement