ஆற்று நீரை உறிஞ்சும் குழாயில் சாயக்கழிவு நீரும் வெளியேற்றம்


??????, ???. 15?
ஈரோடு, அக். 15-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அந்தியூர், பவானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அப்பகுதியினர் வழங்கிய மனுவில் கூறியதாவது:
காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் பல சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இங்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் பவானி மெயின் ரோடு, சுடுகாடு செல்லும் வழி போன்ற இடங்களில் பாதாள சாக்கடை திட்ட குழாய் வழியாக இரவு நேரத்தில் நேரடியாக திறக்கின்றனர்.
மேலும், பவானி ஆற்றில் இருந்து நேரடியாக குழாய் பதித்து, நீரை உறிஞ்சி பயன்படுத்துவதுடன், அதே குழாயில் கழிவு நீரை ஆற்றில் விடுகின்றனர். சீதபாளையம், திப்பிசெட்டிபாளையம், காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் போன்ற இடங்களில் சாய ஆலைகளுக்கான குழாய்கள் நிரந்தரமாக பதித்து வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன், ஆற்று நீர் உறிஞ்சுவதையும் தடுத்து, அதுபோன்ற ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement